This Article is From Mar 24, 2020

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!! அத்தியாவசிய தேவை தவிர்த்து மற்ற சேவைகள் முடக்கம்

காய்கறி, பால், மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல செயல்படும். பேருந்து, டாக்ஸிகள் இயங்காது. பெட்ரோல் பங்க்குகள், கேஸ் ஏஜென்ஸிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் செயல்படும். தனியார் நிறுவனங்களில் பணி புரிவோரின் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி உண்டு.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!! அத்தியாவசிய தேவை தவிர்த்து மற்ற சேவைகள் முடக்கம்

ஏப்ரல் 1-ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு
  • அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன
  • ஏப்ரல் 1-ம்தேதி வரையில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. 

 ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1-ம்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுவரை பேருந்து, கார் டாக்ஸிகள் ஓடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.

மருந்துக்கடைகள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் ஆகியவை தொடர்ந்து இயங்கும். 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள். 

காய்கறி, பால், மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல செயல்படும். பேருந்து, டாக்ஸிகள் இயங்காது. பெட்ரோல் பங்க்குகள், கேஸ் ஏஜென்ஸிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் செயல்படும். தனியார் நிறுவனங்களில் பணி புரிவோரின் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி உண்டு. 

தமிழகத்தில் தற்போது 15 பேருக்கு கெரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா அறிகுறிகளுடன் சுமார் 12 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 3 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது வீடுகளை அடையாளும் காணும் விதமாகச் சென்னை மாநகராட்சி ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. 

இதற்கிடையே கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களுக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. இதனால் அடுத்து வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

.