This Article is From Mar 24, 2020

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!!

கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!!

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு தடை உத்தரவு பொருந்தாது.

ஹைலைட்ஸ்

  • நாளை மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது 144 தடை உத்தரவு
  • அனைத்து மாவட்ட எல்லைகளும் நாளை மாலை 6 மணிக்கு மூடப்படும்
  • 5 பேருக்கு மேல் கூடினால் கைது செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்றும், மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ம்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.

மருந்துக்கடைகள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் ஆகியவை தொடர்ந்து இயங்கும். நாளை மாலை 5 பேருக்கு மேல் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. 

காய்கறி, மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல செயல்படும். பேருந்து, டாக்ஸிகள் இயங்காது என அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. 

தமிழகத்தில் தற்போது 9 பேருக்கு கெரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா அறிகுறிகளுடன் சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 3 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது வீடுகளை அடையாளும் காணும் விதமாகச் சென்னை மாநகராட்சி ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. 

இதற்கிடையே கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களுக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. இதனால் அடுத்து வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

.