This Article is From Mar 23, 2020

''உங்களுக்காக போராடும் மருத்துவர்களின் நிலைமைய பாருங்க'' - நெஞ்சை உருக்கும் அமைச்சரின் பதிவு!!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல், மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து, நோய் பரவுதலை தவிர்க்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாக உள்ளது.

''உங்களுக்காக போராடும் மருத்துவர்களின் நிலைமைய பாருங்க'' - நெஞ்சை உருக்கும் அமைச்சரின் பதிவு!!

தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம்பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • பாதுகாப்பு கவசங்கள் அணிவதால் முகத்தில் காயமடைந்த மருத்துவர்கள்
  • மருத்துவர்களின் அர்ப்பணிப்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்
  • மக்கள் வீடுகளை விட்டு வராமல் இருப்பதே மருத்துவர்களுக்கு செய்யும் உதவி

கொரோனா பாதிப்பை எதிர்கொண்டு வரும் மருத்துவர்கள் குறித்த புகைப்படம் ஒன்றை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், 'இந்த புகைப்படம் எல்லாவற்றையும் நமக்கு உணர்த்தி விடும். பாதுகாப்பு முக கவசங்களை அணிந்ததால், மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தழும்புகள்தான் இவை. எனவே, மக்கள் வீடுகளிலேயே இருங்கள். வருமுன் காப்பதுதான் சிறந்தது. மக்களிடம் கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்யுங்கள்' என்று கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல், மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து, நோய் பரவுதலை தவிர்க்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாக உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொள்ளுதலை மக்கள் தவிர்த்தால் கொரோனா இன்னும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் மக்கள் அரசு விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் அங்கு கொரோனா வைரஸ் சமூக பரிமாற்றமாக மாறியுள்ளது. தற்போது இந்த இரு நாடுகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உயிர்கள் மடிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

.