This Article is From Apr 06, 2020

அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!!

கொரோனா பாதிப்பு முதலில் ஏற்பட்ட சீனாவில் மொத்தம் 81,708 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் 3,331 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். சிகிச்சையால் குணம்பெற்று 77,078 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது அங்கு 1,299 நோயாளிகள் மட்டுமே உள்ளனர். 

அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!!

உலகிலேயே அதிகமாக இத்தாலியில் 16,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா திணறல்
  • கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
  • மூன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்குமட்டும் 3.50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகளை செய்வதறியாது தவித்து வரும் நிலையில், இந்தியாவில் ஊரடங்கை மக்கள் சிலர் மீறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவை பொறுத்தளவில் இன்று மட்டும் 13,319 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 711 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 10,327-ஆக உயர்ந்துள்ளது. 

ஸ்பெய்ன் மற்றும் இத்தாலியில் 1.35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகிலேயே அதிகமாக இத்தாலியில் 16,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஸ்பெய்னில் 13,169 பேர் உயிரிழந்துள்ளனர். 

பிரான்சில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், இங்கிலாந்தில் சுமார் 5,400 பேரும் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு முதலில் ஏற்பட்ட சீனாவில் மொத்தம் 81,708 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் 3,331 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். சிகிச்சையால் குணம்பெற்று 77,078 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது அங்கு 1,299 நோயாளிகள் மட்டுமே உள்ளனர். 

உலகில் மற்ற அனைத்து நாடுகளை விடவும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். இங்கு சுமார் 9 ஆயிரம் பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
.