This Article is From Jun 08, 2020

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் அவர், நேற்று குணம் அடைந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடம் அடைந்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

நேற்று அன்பழகனின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருந்தது.

ஹைலைட்ஸ்

  • ஜெ. அன்பழகன் கடந்த 2-ம்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
  • நேற்று வரையில் அன்பழகனின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது
  • இன்று ஒட்டுமொத்தமாக உடல் நிலை கவலைக்கிடம் அடைந்துள்ளது

கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் உடல் மீண்டும் கவலைக்கிடம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

61 வயதாகும் ஜெ. அன்பழகன் சென்னை குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் கடந்த 2-ம்தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதீ செய்யப்பட்டது.

3-ம்தேதி அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாகியது. இதனால் மொத்த சுவாசிப்பில் 90 சதவீத ஆக்ஸிஜன் வென்ட்டிலேட்டர் வழியாக அவருக்கு செலுத்தப்பட்டு வந்தது. அடுத்த 2 நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு 40 சதவீத ஆக்ஸிஜன் வென்ட்டிலேட்டர் வழியே செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை அவரது உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம் அடைந்தது. அவருக்கு வென்ட்டிலேட்டர் மூலமாக கூடுதல் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அன்பழகனின் இதய மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் குறைந்துள்ளன.

இவ்வாறு ரிலா மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ. அன்பழகனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நலம் விசாரித்துள்ளனர்.

முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் அவர், நேற்று குணம் அடைந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடம் அடைந்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

.