This Article is From Feb 03, 2020

கொரோனா வைரஸ் எதிரொலி: உலகம் இதுவரை கண்டிராத அதிரடியைக் கையிலெடுக்கும் சீனா!!

Coronavirus Outbreak: தற்போது சீனாவில் லூனார் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பலரும் விடுமுறையில் இருக்கின்றனர்.

Advertisement
உலகம் (c) 2020 BloombergEdited by

Coronavirus Outbreak: உலகின் மிகப் பெரிய ‘வீட்டிலிருந்து வேலை பார்க்கும்’ உத்தியை கையிலெடுக்க உள்ளன சீன நிறுவனங்கள். 

Coronavirus Outbreak: கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியதாக இருக்கிறது. இதன் காரணமாக, உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீட்டிலிருந்தே பணியாளர்கள், வேலை செய்வதை சீன தரப்பு நிறுவனங்கள் அமல் செய்துள்ளன. 

சீனாவில் பெரும்பான்மையான இடங்களில் மக்கள் வீட்டை விட்டே வெளியே வராத நிலை இருக்கிறது. இந்நிலையில் கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் எப்படி தங்களது தொழிலை திறம்பட செய்வது என்பது குறித்து குழம்பி வருகின்றன. 

தற்போதைய சூழல் குறித்து ரிப்ரைஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் எம்.டி ஆல்வின் ஃபூ, “வீட்டிலிருந்து பணியாளர்கள் வேலை செய்தால் அது எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்பதை சோதிக்க எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததாகவே பார்க்கிறோம். எங்கள் நிறுவனத்தில் நிறைய விவாதித்துத்தான் வேலை செய்வோம். அப்படி இருக்கையில் இது கடினமாகவே இருக்கும். அதே நேரத்தில் போன் அழைப்புகள் மற்றும் வீடியோ காலிங் மூலம் அதை சரி செய்யப் பார்க்கிறோம்,” என்கிறார். ரிப்ரைஸ் டிஜிட்டல் விளம்பர நிறுவனத்தில் 400 பேர் பணி செய்து வருகின்றனர். 

Advertisement

தற்போது சீனாவில் லூனார் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பலரும் விடுமுறையில் இருக்கின்றனர். சீக்கிரமே, பலரும் வேலைக்குத் திரும்ப உள்ளனர். அப்போதுதான் உலகின் மிகப் பெரிய ‘வீட்டிலிருந்து வேலை பார்க்கும்' உத்தியை கையிலெடுக்க உள்ளன சீன நிறுவனங்கள். 

இப்படி வீட்டிலிருந்து பணி செய்வதால் பலரும் வீடியோ காலிங் மற்றும் சாட் செய்யும் செயலிகள் மூலம் தங்களது சகப் பணியாளர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். 

Advertisement

இப்படியொரு பக்கம் பல்வேறு திட்டமிடல்கள் நடந்து வந்தாலும், சீனப் பொருளாதாரம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெருமளவு பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கொரோனா குறித்து இருக்கும் பீதிதான் எனப்படுகிறது. கொரோனாவால் இறப்புகள் குறைந்தாலும், அது குறித்தான பீதிதான் பல்வேறு தொழில்கள் சிதைவதற்குக் காரணமாக மாறியுள்ளதாம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு, சார்ஸ் என்கிற வைரஸ் தொற்றால் சீனப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சார்ஸ் காரணமாக உலக அளவில் 40 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸுக்கு நிலையான மருந்து கண்டுபிடிக்காததும், நாளுக்கு நாள் அது குறித்தான அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணம் இருப்பதும், மீண்டும் சார்ஸ் போன்ற தாக்கத்தை சீனப் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சப்படுகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement