This Article is From Feb 05, 2020

மிரட்டும் கொரோனா வைரஸ்... மருந்து கண்டுபிடித்த மருத்துவர்கள்..!- முழுசா தெரிஞ்சுக்கோங்க

Coronavirus: இந்த மருந்தினை எடுத்துகொள்ளும் நோயாளிகள் நல்ல முறையில் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர்

மிரட்டும் கொரோனா வைரஸ்... மருந்து கண்டுபிடித்த மருத்துவர்கள்..!- முழுசா தெரிஞ்சுக்கோங்க

Coronavirus:இந்த மருந்தினை கொண்டு இதுவரை தாய்லாந்தில் எட்டு பேர் குனமடைந்துள்ளனர்.

Bangkok:

Coronavirus: கொரோனா வைரஸ்... கடத்த சில வாரங்களாக ஆசிய நாடுகள் மட்டும் இன்றி உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வருகின்ற விஷயம். சீனாவில், குறிப்பாக வுஹான் நகரில் தோற்றியதாக கருதப்படும் கொரோனா பயத்தால் இந்தியா, மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவில் வசித்து வந்த தங்கள் நாட்டு குடிமக்களை சொந்த நாட்டிற்கே அழைத்து வருகின்றன.

மிரட்டும் இந்த கொரோனா நோய் தொற்றுக்கு இன்று வரை சரியான மருந்து எந்த நாட்டிலும் கண்டுபிடிக்கவில்லை என்றபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் இந்த கொரோனா நோய் தொற்றுக்கு எதிர் மருந்து ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாங்காக் நகரின் ‘ராஜவிதி' என்ற மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள்தான் இந்த மருந்தினை கண்டறிந்துள்ளனர். இந்த மருந்து, காய்ச்சல் மற்றும் எச்ஐவி முறிவுக்குப் பயன்படுத்தக்கூடிய இரு மருந்துகளின் கலவை என்றும், இந்த மருந்தினை கொண்டு தங்கள் மருத்துவமனையில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மருந்தினை எடுத்துகொள்ளும் நோயாளிகள் நல்ல முறையில் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர். அதே சமயம் இந்த மருந்தை கொரோனா நோய்க்கு முழு தீர்வு என்று குறிப்பிட முடியாது என்றும், ஆனால் இந்த மருந்தின் மூலம் நோயாளிகளிடம் நல்ல முனேற்றம் தெரிகின்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த சிகிச்சை குறித்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் கூறும்போது, கடந்த வாரம் இந்த கலப்பு மருந்தினை இரு நோயாளிகளுக்கு கொடுத்தபோது ஒருவர் நல்லமுறையில் குணமடைந்தபோதும், மற்றொருவருக்கு சில ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

தாய்லாந்தில் 19 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிக்கிச்சை மூலம் நலம்பெற்று எட்டு பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் 11 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.