This Article is From Apr 19, 2020

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477ஆக உயர்வு!!

இன்று அதிகபட்சமாக 50 பேர் சென்னையில் கொரோனா  தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477ஆக உயர்வு!!

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதில் இன்று அதிகபட்சமாக 50 பேர் சென்னையில் கொரோனா  தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,477 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றால் 1,372 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே 365 பேர் மாநிலம் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் இன்று 46 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் விகிதம் 27.82 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10 வகுப்பு மாணவனும், முதுநிலை மருத்துவ மாணவர்கள் இருவரும், பத்திரிக்கையாளர்கள் இருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் கீழ் வருமாறு:

சென்னை - 285

கோயம்புத்தூர் - 133

திருப்பூர் - 108

ஈரோடு - 70

திண்டுக்கல் - 74

திருநெல்வேலி - 62

நாமக்கல் - 50

திருவள்ளூர் - 46

செங்கல்பட்டு - 53

திருச்சி - 46

தேனி - 43

மதுரை - 46

கரூர் - 42

நாகை - 43

ராணிப்பேட்டை - 39

தஞ்சை - 46

விழுப்புரம் - 33

தூத்துக்குடி - 26

சேலம் - 24

வேலூர் - 22

திருவாரூர் - 26

கடலூர் - 26

விருதுநகர் - 19

திருப்பத்தூர் - 17

கன்னியாகுமரி - 16

தென்காசி - 22

சிவகங்கை - 11

ராமநாதபுரம் - 10

நீலகிரி - 9

திருவண்ணாமலை - 12

காஞ்சிபுரம் - 9

கள்ளக்குறிச்சி - 3

பெரம்பலூர் - 4

அரியலூர் - 2

மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களில் சில ஆய்வுகளுக்குப் பின்னர் வேறு மாவட்டத்திற்குக் கீழ் மாற்றப்படலாம்.

.