This Article is From Jun 24, 2020

புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து; ஒருவர் பலி!

40 பயணிகளுடன் வந்த அந்த தனியார் பேருந்து NH-16 அருகே ஜாமிஹாதி பகுதியை கடந்த போது சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து; ஒருவர் பலி!

புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து; ஒருவர் பலி!

ஹைலைட்ஸ்

  • புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து!
  • இதில், ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்
  • காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
Balasore (Odisha):

புதுச்சேரியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை பீகார் ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சிமுலியா காவல்நிலைய அதிகாரி பரசுராம் சாகூ கூறும்போது, 40 பயணிகளுடன் வந்த அந்த தனியார் பேருந்து NH-16 அருகே ஜாமிஹாதி பகுதியை கடந்த போது சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். 

பலத்த காயமடைந்த 3 பேர் முதலில் அனுமதித்த மருத்துவமனையில் இருந்து, பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 

ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் சிக்கிதவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு மாற்று போக்குவரத்து ஏற்பாடு செய்து பீகார் அனுப்பி வைக்கப்பட்டதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

.