டெல்லியில் இரண்டு வாரங்களில் சிஆர்பிஎப் பட்டாலியனில் 122 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியதுள்ளதால் அங்கு பெரும் அச்சம் நிலவுகிறது.
இந்த விஷயத்தை கவனத்தில் கொண்ட, மத்திய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எப் தலைவரிடம் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளை விளக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,293 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக பாதிப்பு எண்ணிக்கையானது, 37,336ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பால் இதுவரை 1,218 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, டெல்லியில், 31-வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, டெல்லி மயூர் விஹார்-3 பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதிப்பு மேலும் பரவாதபடி பரிசோதனைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த, பட்டாலியனியில் உள்ள அசாமைச் சேர்ந்த 55 வயதான வீரர் ஒருவர் இந்த வார தொடக்கத்தில் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார். தொடர்ந்து, இந்த பட்டாலியனை சேர்ந்த 12 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு, யூனிட்டில் உள்ள 45 வீரர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிஆர்பிஎப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த இரு வாரங்களில் 31-வது பட்டாலியனில் இதுவரை 122 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 100க்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் வர இருப்பதால் பாதிப்பு அதிகரிக்குமா எனத் தெரியவில்லை.
இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று இருந்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மன்டோலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் சிஆர்பிஎப் துணை ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. அதைத் தொடர்ந்து 12 வீரர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பரிசோதனையைத் தீவிரப்படுத்தியபோதுதான் ஏராளமான வீரர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது” எனத் தெரிவித்தார்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|