Lucknow: கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்களை முழுமையாக மூடி சீல் வைக்கப்படும் என்று அம்மாநில தலைமை செயலாளர் தெரிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கையானது இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலகட்டங்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அரசு 100 சதவிகிதம் உறுதியளித்திருக்கின்றது. இந்த 15 மாவட்ட பட்டியலில், லக்னோ, கெளதம புத்தா நகர், காசியாபாத், மீரட், ஆக்ரா ஷாம்லி மற்றும் சஹாராபூர் ஆகியவை அடங்கும்.
உத்தரப் பிரதேசத்தில் 326 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆறு பகுதிகள் அல்லது அதற்கு அதிகமான இடங்கள் பகிரலை (Hotspots) பகுதிகளாக, அதாவது தொற்று பரவலின் மையமாக இருக்கும் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த முழுமையான பட்டியல் இன்று மாலை தயாராகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்மாநிலத்தில் மேலும், இரண்டு பகிரலை பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அடையாளம் கண்டுள்ளது. கடந்த இரண்டுவார காலகட்டங்களில் இந்த குறிப்பிடப்பட்ட இடங்களிலிருந்து தொற்று பரவல் அதிகரித்திருக்கின்றது. இப்பகுதிகள் மக்கள் தொகை அதிகமிருக்கும் பகுதிகளாகும்.
முன்னதாக பிரதமர் மோடி கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 24 முதல் 21 நாட்கள் முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையை அமல்படுத்தினார். சமீபத்தில் பிரதமர் முக்கிய அரசியல் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈட்டுப்பட்டிருந்தார். இந்த நிலையில் முழு முடக்க நடவடிக்கையானது நீடிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதையொட்டி, உத்தரப் பிரதேச முதல்வர் தனது மாநிலத்தில் 15 மாவட்டங்களைச் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி ஏப்ரல் 11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே இது குறித்தான இறுதி முடிவு எடுக்கப்படலாம். முழு முடக்க நடவடிக்கை என்பது விலக்கிக்கொள்ளப்படும் என்றாலும் கூட, ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அதனை விலக்கிக்கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லை என தெரிய வருகின்றது.
தங்கள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் எனில் ஒரே ஒரு நபர் கூட கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது. அப்போதுதான் மாநிலத்திலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்திக்கொள்ளப்படும். இது நீண்ட காலம் ஆகலாம். ஆனால் அதற்கு முன்பே கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்பது மிகவும் கடினம். என உத்தரப்பிரதேசத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறியுள்ளார்.
பாஜக ஆளும் அசாம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் மத்திய அரசின் இந்த முழு முடக்க நடவடிக்கையை திரும்ப பெறுவது குறித்து தங்கள் கவலைகளைப் பதிவு செய்திருந்தன. ஆனால்,, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் முழு முடக்க நடவடிக்கைகளை மத்திய அரசு படிப்படியாக திரும்ப பெறுவதற்குத் தனது ஆதரவினை அளித்துள்ளார்.