Coronavirus: இந்தியாவில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் ஒரே நாளில் 17 பேர் பலி
- பாதிப்பு எண்ணிக்கை 5,734ஆக அதிகரிப்பு
- மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5,734ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14-ம் தேதியுடன் திரும்பப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியமாகாத விஷயம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட உள்ளது.
டெல்லியில் இதுவரை 20 கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறும்போது, மூடக்கப்பட்டுள்ள இந்த பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் வீட்டிலே கிடைப்பது அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை, சண்டிகார், நாகாலாந்து, ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தலாம். அதனால், வீட்டு விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது காட்டயாமாக்கப்பட்டுள்ளது. துணிகளால் ஆன முகக்கவசங்களும் தகுதியானதாகவே கருதப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வீடியோ காட்சிகள் மூலம் அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கை உத்தரவை தளர்த்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்பதால், பல மாநிலங்களும், வல்லுநர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, மாநில அரசு நடத்தும் பரிசோதனை மையங்களிலும், தனியார் மையங்களிலும் கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, மேலும் சில வாரங்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் மத வழிபாட்டு தளங்களுக்கு தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படாது என்று தெரிகிறது.
ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு நெருக்கடி, அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், தொழில்களுக்கான அழுத்தம் உள்ளிட்டவை அரசை மீண்டும் இயங்க வலியுறுத்துகின்றன. இதன் காரணமாக கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டுகள் மட்டும் சீல் வைக்கப்பட்டு மற்ற பகுதிகளில் கட்டுபாடுகளை தளர்த்தவும் ஆலோசித்து வருகின்றனர்.