This Article is From Jun 29, 2020

குறையாத கொரோனா! நாடு முழுவதும் ஒட்டு மொத்த பாதிப்பு 5.48 லட்சமாக உயர்வு!!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 19,459 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 380 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறையாத கொரோனா! நாடு முழுவதும் ஒட்டு மொத்த பாதிப்பு 5.48 லட்சமாக உயர்வு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,48,318 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,10,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,21,723 பேர் குணமடைந்துள்ளனர். 16,475 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 19,459 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 380 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில், கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் விகிதமானது 11.40 சதவிகிதமாக உள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே போல நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.

135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், இதுவரை ஏறத்தாழ 83 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசு கூறியுள்ளது. மேலும், நேற்று மட்டும் 1.7 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தேசிய அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 5,493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 153 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,64,626 ஆ க அதிகரித்துள்ளது. இது சீனாவைவிட(84,757) இரு மடங்கு அதிகமாகும்.

இரண்டாவாதாக தேசிய தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 2,889 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,077 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1 கோடியை கடந்துள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

.