This Article is From Jun 13, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியது

உயிரிழப்பை போன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,362 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தம் 23 ஆயிரத்து 409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியது

உயிரிழந்தவர்கள், குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 18,878 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 687 ஆக அதிகரித்திருக்கிறது. 

உயிரிழந்தவர்கள், குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 18,878 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 17,911 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய பாதிப்பில் ஆண்கள் 1,183 பேர், பெண்கள் 806 பேர் ஆவார்கள்.  ஒட்டுமொத்த பாதிப்பில் ஆண்கள் 26,350 பேர், பெண்கள் 16,320 பேர், திருநங்கைகள் 17 பேர் ஆவார்கள்.

கொரோனா பரிசோதனை மையங்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் தற்போது 45 அரசு மற்றும் 34 தனியார் என மொத்தம் 79 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. 

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களில் 12 பேர் தனியார் மருத்துவமனையிலும், 18 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். மொத்த உயிரிழப்பு 397 ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய மொத்த பாதிப்பில் சென்னையை சேர்ந்தவர்கள் 1,484 பேர் ஆவார்கள். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 136 பேரும், காஞ்சிபுரத்தில் 22 பேரும், திருவள்ளூரில் 78 பேரும், திருவண்ணாமலையில் 49 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழப்பை போன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,362 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தம் 23 ஆயிரத்து 409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

.