বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 10, 2020

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 199 பேர் பலி, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்வு!

Coronavirus: நாட்டில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 1,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement
இந்தியா Edited by

Coronavirus: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Highlights

  • கொரோனா பரவலைத் தடுக்க தற்போது நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது
  • ஏப்ரல் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது
  • ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது
New Delhi:

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 199 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 1,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸை எதிர்த்துத் திறம்பட போராட, அதிகளவில் சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால், நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கொரோனா பரிசோதனைகளை வேகமாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பை போன்ற மாநகரங்களில் நிறைய சோதனைக் கருவிகள் வரவழைக்கப்பட்டும், தனியார் மருத்துவமனைகளுக்கு சோதனை செய்ய அனுமதி கொடுத்தும், கொரோனா பரிசோதனைகள் அதிகளவு செய்யப்பட்டு வருகின்றன. 

Advertisement

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக இருந்த நிலையில், நேற்று 834 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக நேற்று 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் ஒரே குழுவில் இருந்தவர்கள். 

மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல், கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களில் 6 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது.
 

Advertisement
Advertisement