Read in English বাংলায় পড়ুন
This Article is From Mar 15, 2020

கொரோனா வைரஸ் நோயாளி விமானத்தில் தப்ப முயற்சி, 270 பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை

இப்போது, ​​மீதமுள்ள 270 பயணிகளைப் பரிசோதிக்கவும், மேலும் விசாரணைக்கு மருத்துவமனைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Advertisement
இந்தியா
Kochi:

கொச்சியிலிருந்து துபாய்கு புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானம் 270 பயணிகளோடு தடுத்து நிறுத்தப்பட்டு அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த பயணி ஒருவருக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் 270 பயணிகளோடு விமானத்தில் பறக்க இருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் பயணிகள் அனைவரும் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

இந்த பயணி கேரளாவின் ஹில் ரிசார்ட் நகரமான முனாரில்  விடுமுறை கொண்ட குழுவைச் சேர்ந்தவர், அவர் கண்காணிப்பிலிருந்தார் என்று கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட வசதியை விட்டு வெளியேறும்போது அந்த நபர் முனாரில் உள்ள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் அவர் கொச்சி விமான நிலையத்தில் மீதமுள்ள குழுவில் சேர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

அவருக்கு கொரோனா வைரஸ்-பாசிட்டிவ் என்று அவரது சோதனை முடிவுகள் காட்டியதை அடுத்து, அவரை சுகாதார அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றனர் என்று கொச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலாவதாக, அவரது குழுவில் உள்ள 19 பயணிகளையும் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது, என்றார்.

Advertisement

"இப்போது, ​​மீதமுள்ள 270 பயணிகளைப் பரிசோதிக்கவும், மேலும் விசாரணைக்கு மருத்துவமனைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Advertisement