This Article is From Jul 13, 2020

அச்சுறுத்தும் கொரோனா! நாடு முழுவதும் ஒரே நாளில் 28,701 பேருக்கு பாதிப்பு!!

இதுவரை நாடு முழுவதும் இதுவரை 1,18,06,256 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  நேற்று மட்டும் 2,19,103 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா! நாடு முழுவதும் ஒரே நாளில் 28,701 பேருக்கு பாதிப்பு!!

நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 2 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 8,78,254 ஆக அதிகரித்துள்ளது.
  • தற்போது 3,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • 23,174 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8,78,254 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,53,471 பேர் குணமடைந்துள்ளனர். 23,174 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 28,701 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 500 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் இதுவரை 1,18,06,256 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  நேற்று மட்டும் 2,19,103 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2 லட்சத்தினை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா(7,827), தமிழகம்(4,244), கர்நாடகா (2,627), ஆந்திரா (1,933), டெல்லி (1,573) போன்ற மாநிலங்கள் அதிக அளவு தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன.

மகாராஷ்டிரா (173), கர்நாடகா (71), தமிழ்நாடு (68), டெல்லி (37), மேற்கு வங்கம் (26) போன்ற மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 63.01 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 13.09 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2.54 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இதுவரை 1.4 லட்சம் மக்கள் குணமடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் 1.29 கோடிக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.69 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று தடுப்பில் அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது. சமீபத்தில் 60,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சமாக அதிகரித்துள்ளது.

.