This Article is From Jun 15, 2020

முன்னெப்போதும் இல்லா அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 11,502 பேருக்கு கொரோனா! 325 பேர் உயிரிழப்பு!!

இதுவரை 57,74,133 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லா அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 11,502 பேருக்கு கொரோனா! 325 பேர் உயிரிழப்பு!!

ஹைலைட்ஸ்

  • இதுவரை 57,74,133 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுன
  • 24 மணி நேரத்தில் 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன
  • நாடு முழுவதும் கொரோனா 3,32,424 ஆக அதிகரித்துள்ளது

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,32,424 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,53,106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,69,798 பேர் குணமடைந்துள்ளனர். 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். 

முன்னெப்போதும்  இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 11,502 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 325 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுவரை 57,74,133 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதமானது 51.07 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 1,69,798 பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

டெல்லியை பொறுத்த அளவில் கொரோனா தொற்றால் இதுவரை 41,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,327 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து 15வது நாளாக ஆயிரத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,974 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் நேற்று 1,415 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,859 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.

தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் 4,974 பேர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், ஹைதராபாத், ரங்கா ரெட்டி, விகராபாத், மேட்சல் மற்றும் சங்க ரெட்டி மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் 50,000 பேருக்கு 10 நாட்கள் சோதனை செய்யப்படும் என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 382 பேர் கொரோனா தொற்றுக்கு புதியதாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,15,729 ஆக அதிகரித்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 4.33 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். 79.12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.