This Article is From Jun 08, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

அவருக்கு டைப் -1 சுவாசக் கோளாறு மற்றும் கடுமையான சுவாச நோய் நோய்க்குறி (ARDS) ஆகியவற்றுடன் பைலேட்ரல் நிமோனியாவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு! (Representational)

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு!
  • பைலேட்ரல் நிமோனியாவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • நரம்புத்தசை நோயான மையஸ்தீனியா க்ரேவிஸால் அவதிப்பட்டு வந்துள்ளார்
Hyderabad:

தெலுங்கானாவில் 33வயது ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜூன் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து, அவருக்கு டைப் -1 சுவாசக் கோளாறு மற்றும் கடுமையான சுவாச நோய் நோய்க்குறி (ARDS) ஆகியவற்றுடன் பைலேட்ரல் நிமோனியாவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக காந்தி மருத்துவமனை சூப்பரிண்டென்ட் ராஜா ராவ் கூறும்போது, ஏற்கனவே அவர் நீண்ட கால நரம்புத்தசை நோயான மையஸ்தீனியா க்ரேவிஸால் (Myasthenia Gravis) அவதிப்பட்டு வந்துள்ளார். அது மாறுப்பட்ட அளவில் எலும்பு தசை பலவீனத்திற்கு வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அவர் ஐ.சி.யுவில் இருந்தபோது, தொடர்ந்து மருத்துவர்கள் குழு சுழற்சி முறையில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது. நானும் அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன். எனினும், நேற்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், குறைந்தது 13 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 154 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,650 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 137 ஆகவும் அதிகரித்துள்ளது. 

.