This Article is From Apr 01, 2020

டெல்லி மதக் கூட்டம்: 5 ரயில்கள், ஆயிரக்கணக்கான பயணிகளை கண்டறியும் பணிகள் தீவிரம்

டெல்லியில் இருந்து ஆந்திரா செல்லும் துரோன்டோ எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மார்ச்.13 முதல் மார்ச்.19 வரை புறப்பட்டுள்ளன.

டெல்லி மதக் கூட்டம்: 5 ரயில்கள், ஆயிரக்கணக்கான பயணிகளை கண்டறியும் பணிகள் தீவிரம்

மதக் கூட்டத்திற்கு சென்று திரும்பியவர்களுடன் சென்ற ஆயிரக்கணக்கான பயணிகளை கண்டறியும் பணிகள் தீவிரம் (Representational)

ஹைலைட்ஸ்

  • ஆயிரக்கணக்கான பயணிகளை கண்டறியும் பணிகள் தீவிரம்!
  • உண்மையான எண்ணிக்கை ரயில்வேயிடம் இன்னும் தெளிவாக இல்லை
  • ஒவ்வொரு ரயிலும் 1000 முதல் 1200 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
New Delhi:

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பயணித்த ரயில்களில் அவர்களுடன் ரயிலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பயணிகளின் விவரங்களை ரயில்வே துறை கண்டறிந்து வருகிறது.

டெல்லியில் இருந்து ஆந்திரா செல்லும் துரோன்டோ எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மார்ச்.13 முதல் மார்ச்.19 வரை புறப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் தொடர்பு கொண்டவர்களின் உண்மையான எண்ணிக்கை ரயில்வேயிடம் இன்னும் தெளிவாக இல்லை. எனினும், ஒவ்வொரு ரயிலும் 1000 முதல் 1200 பயணிகளையும் மற்றும் பிற ஊழியர்களையும் ஏற்றிச் சென்றதாக தெரிகிறது. இது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மாநில அதிகாரிகள் கூறும்போது, தொடர்பு கண்டுபிடிப்பை உறுதி செய்வதற்காக நிகழ்வில் பங்கேற்றவர்களின் பட்டியலுடன் பயணிகளின் பட்டியலையும் ரயில்வே நிர்வாகம் மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. 

அதில், மார்ச்.13ஆம் தேதி நிகழ்வுக்குப் பிறகு ஏபி சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 10 இந்தோனேசியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல், ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பி1 பெட்டியில் பயணம் செய்த மலேசிய பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவருடன் அதே பெட்டியில் பயணம் செய்த 60 பேரின் தகவல்களை மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் தேடப்பட்டு வருகிறது. 

மார்ச்.16ம் தேதி 23 பேருடன் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரே ஜார்கண்டில் கொரோனா பாதித்த முதல் பெண்ணும் ஆவார். 

.