This Article is From Apr 28, 2020

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

நம்பிக்கை தரும் செய்தியாக 6,869 பேர் கொரோனா தொற்றிலிருந்து தற்போது வரை மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 23.33 ஆக உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

29,435 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,543 ஆக அதிகரித்துள்ளது. 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 29,435 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 934 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நம்பிக்கை தரும் செய்தியாக 6,869 பேர் கொரோனா தொற்றிலிருந்து தற்போது வரை மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 23.33 ஆக உள்ளது.

நேற்று மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, மே 3ம் தேதிக்கு பிறகும் முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கை நீட்டிக்கப்படலாம் என தெரிவித்திருந்தார். “தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய நாம், பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.“ என குறிப்பிட்டிருந்தார். குறைவான கொரோனா தொற்று அல்லது முழுமையாகத் தொற்று இல்லாத இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என தெரியவருகிறது.

.