This Article is From May 20, 2020

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் 7.9 மட்டுமே!

சர்வதேச அளவில் ஒரு லட்சம் மக்களில் 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் மக்களில் 7.9 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தரவுகளை மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Posted by

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

New Delhi:

தேசிய அளவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் உலக அளவில், சர்வதேச அளவில் இந்த எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்த்தால் மிகக்குறைவு என தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் ஒரு லட்சம் மக்களில் 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் மக்களில் 7.9 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தரவுகளை மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

இதே போல இறப்பு விகிதத்திலும் இந்தியா குறைந்த அளவிலேயே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் இறப்பவர்களின் விகிதமானது 4.2 என்கிற அளவில் உள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த விகிதம் 0.24 என்கிற அளவில் உள்ளது.

மூன்றாவது முறையாக முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட்டிருக்கின்றன இத்தருணத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 42,298 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்த எண்ணிக்கைக்கு முழு முடக்க நடவடிக்கை முக்கியக் காரணம் என மத்திய சுகாதார அமைச்சகத்தினை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். மாரச் மாதத்தில் 7.1 என்ற சதவிகிதத்திலிருந்த குணமடைந்தோரின் எண்ணிக்கையானது தற்போது 36.62 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

சர்வதேச நாடுகளில், அமெரிக்காவில் 28.10, ஐக்கிய இராச்சியத்தில் 53.27 மற்றும் இத்தாலியில் 53.23 சதவிகிதத்தில் இறப்பு எண்ணிக்கை இருக்கையில் இந்தியாவில் 0.24 என்கிற விகிதத்தில்தான் இறப்பு எண்ணிக்கை உள்ளது என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தெரிவித்துள்ளது.

சீனாவைக்காட்டிலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்திருந்தாலும், சீனாவின் இறப்பு விகிதம் 0.33 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்தியாவில் தொற்று பரவல் நிலையை பொறுத்த அளவில் இன்றைய தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5,611 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,303 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போ கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். 42,298 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 61,149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் 37,136 இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,325 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து தமிழகம், அதிக தொற்று பாதிக்கப்பட்டவர்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 13,191 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம் உள்ளது. இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 13 ஆயிரத்தினை நெருங்குகிறது.

Advertisement

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொற்று அதிகம் உள்ள பகுதிகளை நிறங்களை கொண்டு அடையாளப்படுத்தும் முறையை மாநில அரசுகள் சுயேச்சையாக மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது மாநிலங்கள் சுயமாக பொருளாதார நடவடிக்கைகளை துவங்க வழிவகுக்கும். மேலும், உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகளுடன் மே 25 முதல் இயங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement