This Article is From Jul 10, 2020

இந்தியாவின் 90 சதவீத பாதிப்புகள் 8 மாநிலங்களில்தான் உள்ளன! மத்திய அரசு தகவல்

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா,  ஆந்திரா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 90 சதவீத பாதிப்புகள் இருக்கின்றன. 

Advertisement
இந்தியா

நாட்டில் தற்போது 7.67 லட்சம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 21,129 ஆக உயர்ந்துள்ளது.

New Delhi:

இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பின் 90 சதவீதம் 80 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக 49 மாவட்டங்களில்தான் 80 சதவீதம்பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே 86 சதவீத கொரோனா பாதிப்புகள் இருக்கின்றன. மொத்த உயிரிழப்புகளில் 80 சதவீதம் 32 மாவட்டங்களில் இருக்கின்றன. 

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது-

கொரோனா பாதிப்புகளை முன்னரே அறிந்து இந்தியா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பாதிப்புகள் குறைவாக இருக்கிறது.

Advertisement

நாட்டில் 10 லட்சம் பேரில் 538 பேருக்குத்தான் கொரோனா உள்ளது. 10 லட்சம் பேரில் 15 பேர்தான் உயிரிழக்கின்றனர். இது சர்வதேச சராசரியான 10 லட்சம் பேருக்கு 1,453 பேர் பாதிப்பு என்பதைக் காட்டிலும் மிகக் குறைவானதாகும்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 90 சதவீத பாதிப்புகள் இருக்கின்றன. 

Advertisement

மொத்தம் 21.3 கோடி N95 மாஸ்க்குகள், 1.2 கோடி தனிநபர் பாதுகாப்பு உடைகள், 6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் உள்ளிட்டவை மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போது 7.67 லட்சம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 21,129 ஆக உயர்ந்துள்ளது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement