இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது!
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது!
- கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேர் புதிதாக பாதிப்பு
- மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 23,727 ஆக உயர்வு
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 9 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 553 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 23,727 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய் பாதிப்பு ஏற்பட்ட 5.71 அல்லது 63.02 சதவீதம் பேர் குணமடைந்துள்ளளனர். தொடர்ந்து, நாட்டில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி, குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 6,497 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,60,924 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, அங்கு புனேவில் இரண்டாவது கட்ட லாக்டவுன் திங்கள் முதல் ஜூலை 23.தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்கும் மற்றொரு முயற்சியாக இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. புனேவில், நேற்று மட்டும் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 29,600 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் புதிதாக 4,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் தொடர்ந்து, 5வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு மதுரை மாவட்டம் தொடர்ந்து முக்கிய ஹாட்ஸ்பாட் பகுதியாக விழங்கி வருகிறது.
டெல்லியில் நேற்று புதிதாக 1,246 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,13,740 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் 3,411 பேர் உயரிழந்துள்ளனர். டெல்லியில் மட்டும் 658 தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்கள் உள்ளன.
கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, பெங்களூர் நகரம் மற்றும் கிராம்புரங்களில் இன்று மாலை முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது கர்நாடகாவில் 40,000ஐ கடந்தது. நேற்று மட்டும் அங்கு 2,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாமில் நேற்று மட்டும் 1,001 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 17,807 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இதில் 11,416 பேர் குணமடைந்துள்ளனர். 6,348 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து, இந்திய மூன்றாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,222 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறும்போது, உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகளவில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.