Read in English
This Article is From Jun 05, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா! மொத்த உயிரிழப்பு 6348 ஆக அதிகரிப்பு!!

ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6348 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement
இந்தியா

விகிதம் மேம்பட்டிருந்தாலும், இந்தியாவில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 9,851 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,10,960 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6348 ஆக உயர்ந்துள்ளது. 

  • தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 1,384 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தேசிய தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் குறைந்த அளவிலான பரிசோதனைகள் மிகவும் கவலையளிப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
  • தொடர்பு தடமறிதல் மற்றும் கடுமையான கட்டுப்பாடு போன்றவற்றுடன் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • இம்மாதம் 8-ம் தேதியன்று திறக்கப்பட இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் குறித்து புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
  • வழிபாட்டுத்தலங்களில் சிற்பங்களை தொடுவது, பாடுவது, பிரசாதம் வழங்கப்படுவது போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்படும்.
  • நிறுவன ஊழியர்களில் அதிக வயதானவர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் போதிய முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உணவகங்களில் மின்னணு பண பரிமாற்ற முறையை முடிந்த அளவு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • மகாராஷ்டிராவரை பொறுத்த அளவில் 77,793 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,933 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 123 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,710 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 33,681 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
  • மேற்கு வங்கத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,876 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 283 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் யாரேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத அளவு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அசாம் சுகாதார துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில் தெரிவித்துள்ளார்
Advertisement