New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 9,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 266 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் இதுவரை 2,66.598 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,29,917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,29,215 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாக 7,466 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தினை பொறுத்த அளவில், தேசிய அளவில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது இம்மாநிலம் சீனாவின் ஒட்டு மொத்த எண்ணிக்கையை காட்டிலும் அதிகமான தொற்றினை கொண்டுள்ளது. தற்போது இம்மாநிலத்தில் 88 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தமிழகத்தினை பொறுத்த வரையில் கடந்த 8 நாட்களாக நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 33 ஆயிரத்தினை கடந்துள்ளது மேலும், தேசிய தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தினை நெருங்கி வருகின்றது.
டெல்லியில் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 3,700 பேரில் 1,007 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 9.2 என்கிற விகிதத்தில் கூடுதலாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 49,16,116 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 1,41,682 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 48.46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.