हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 27, 2020

ஊரடங்கை நீட்டிக்க முடிவு? 9 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

PM Modi Video-Conference: ஏப்.20ம் தேதி முதல் குறிப்பிட்ட சில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது குறித்தும் முதலமைச்சர்கள் விவாதிக்க வாய்ப்புள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • It will be PM's fourth interaction with states amid lockdown
  • Video-conference expected to review lockdown extension
  • East and north-east states' Chief Ministers to speak with PM
New Delhi:

கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கடந்த மார்ச் 14ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக நான்காவது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இன்று காலை 11 மணி அளவில் நடக்கவுள்ள இந்த வீடியோ கான்பரன்சிங்கில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல், அடுத்தடுத்த கட்டங்களாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்போதும், எவ்வாறு அதனை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. 

ஏற்கனவே, ஏப்.20ம் தேதி முதல் குறிப்பிட்ட சில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது குறித்தும், சோதனை கருவிகள் மற்றும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் பிரதமருடன், முதலமைச்சர்கள் விவாதிக்க வாய்ப்புள்ளது. 

Advertisement

அதேபோல், மத்திய அரசு தங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதையும் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையை (FRBM) மாநிலங்கள் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நோய்த் தொற்றுக்கான நிவாரணங்கள் வழங்க நிதி தேவைப்படும் என்பதால், நிதி தேவை அதிகரிக்கும். அதனால், மாநிலங்களுக்கான நிதிப் பற்றாக்குறையைக் குறித்துப் பட்டியலிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏறக்குறைய, அனைத்தும் பெரும் மாநிலங்களும் முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் தங்களது கருத்துகளைத் தெளிவாக எடுத்து கூறிவிட்டன.

Advertisement

இந்தமுறை, பீகார், ஒடிசா, குஜராத், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். வடகிழக்கு பகுதியில், மேகாலயா மற்றும் மிசோரம் மாநில முதல்வர்களும் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். 

பெரும் மாநிலங்களோ, சிறிய மாநிலங்களோ அனைவரும் தங்களது கருத்துளை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கடந்த முறை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதித்த போது, தங்களது கோரிக்கைகளை எழுத்து விடிவில் சமர்ப்பிக்குமாறு எந்தவித வேண்டுகோளும் மத்திய அரசு தரப்பில் விடுக்கப்படவில்லை. 

Advertisement

முதன் முறையாக கடந்த மார்ச்.20ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, வைரஸை கட்டுப்படுத்துவது குறித்தும், மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து 8 மாநிலங்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தன.

ஏப்.11ம் தேதி நடந்த இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில், 13 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

Advertisement