New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 93,337 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,247 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 53,08,015 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 85,619 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10,13,964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42,08,432 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே போல ஒரே நாளில் 95,880 குணமடைந்துள்ளனர்.
இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.