நாடு முழுவதும் இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஹைலைட்ஸ்
- நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கை 23 லட்சத்தினை கடந்துள்ளது.
- இதுவரை 46,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
- 16 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்
New Delhi: சர்வதேச அளிவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2 கோடியை கடந்திருக்கக்கூடிய நிலையில் உலகெங்கிலும் உள்ள தொற்றுநோயியல் நிபுணர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தரவுகளைப் கணக்கில் கொண்டு, தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதா என்பதை சரிபார்க்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் ஒட்டு மொத்த பாதிப்பு மற்றும் தினசரி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித் தரவுகள், மாநில வாரியாக - முடிவு ஆபத்தானதாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொற்று பாதிப்பில் திருப்புமுனையைக் காணும் ஒரே மாநிலம் டெல்லி என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், குஜராத், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொற்று கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், ஹரியானா, ஜார்க்கண்ட், மற்றும் தெலுங்கானாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் கோவிட் கட்டுப்பாட்டில் இல்லை என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இறுதி ஆய்வில், ஒட்டுமொத்த அகில இந்திய நிலைமை கவலை அளிக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.