This Article is From Mar 11, 2020

கொரோனா தாக்குதலுக்கு ஈரானில் ஒரே நாளில் 63 பேர் பலி! பொதுமக்கள் அதிர்ச்சி!!

கொரோனா வைரஸ் காரணமாக ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா கமேனி, தனது புத்தாண்டு உரை நிகழ்ச்சியை தவிர்த்துள்ளார்.

Advertisement
உலகம் Edited by

இன்றைய நிலவரப்படி உலகில் சுமார் 1.20 லட்சம்பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Highlights

  • ஈரான் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது
  • கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகள் ஈரானில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன
  • ஒரே நாளில் 63 பேர் பலியாகியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆசிய நாடான ஈரானில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 

இதுகுறித்து ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அலிரெஸா வகாப்சதே கூறுகையில், 'நேற்று 958 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் இங்கு 63 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 354 ஆக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே கொரோனா பாதிப்பிலிருந்து சுமார் 3 ஆயிரம்பேர் ஈரானில் மீண்டுள்ளனர். இந்த செய்தி மட்டும் மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக உள்ளது. 

மேலும் வைரஸ் பரவாமல் இருப்பதற்காக ஈரான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. 

Advertisement

பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாசாரா, விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா கமேனி, தனது புத்தாண்டு உரை நிகழ்ச்சியை தவிர்த்துள்ளார்.

Advertisement

இன்றைய நிலவரப்படி உலகில் சுமார் 1.20 லட்சம்பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 4,300-யை கடந்துள்ளது. 

Advertisement