বাংলায় পড়ুন
This Article is From May 07, 2020

குஜராத் அகமதாபாத்தில் 4,425 பேருக்கு கொரோனா! ஒருவாரம் முழு ஊரடங்கிற்கு உத்தரவு

கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் அகமதாபாத் முனிசிபல் கமிஷனர் விஜய் நேரா தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது மொத்த பொறுப்பையும் துணை சேர்மன் முகேஷ் குமார் ஏற்றுள்ளார். அவரது தலைமையிலான குழு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

சமீபத்தில் ஊரடங்கை மீறி மக்கள் அதிக எண்ணிக்கையில் நடமாடத் தொடங்கினர். இதனால் முழு ஊரடங்கு போடப்பட்டு ராணுவம் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

Highlights

  • குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • அகமதாபாத்தில் மட்டும் 4,425 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
  • ஊரடங்கை நிலை நிறுத்த துணை ராணுவம் வரவழைக்கப்படுகிறது
Mumbai:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 4,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை தடுப்பதற்காக ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அகமதாபாத் நகர நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பால், மருந்து போன்ற மிக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் மற்றொரு முக்கிய நகரமான சூரத்திலும் கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை முதற்கொண்டு விதிக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் 750 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

நேற்றை மாலை நிலவரப்படி அகமதாபாத்தில் 4,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் மொத்தம் 6,625 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

Advertisement

குஜராத்தில் உயிரிழப்பு வீதம் 6.1 ஆக உள்ளது. இது தேசிய வீதமான 3.3 யை விட இருமடங்காகும். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம்தான் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. 

சமீபத்தில் ஊரடங்கை மீறி மக்கள் அதிக எண்ணிக்கையில் நடமாடத் தொடங்கினர். இதனால் முழு ஊரடங்கு போடப்பட்டு ராணுவம் வரவழைக்கப்பட்டிருக்கிறது. 

Advertisement

முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் அகமதாபாத் முனிசிபல் கமிஷனர் விஜய் நேரா தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது மொத்த பொறுப்பையும் துணை சேர்மன் முகேஷ் குமார் ஏற்றுள்ளார். அவரது தலைமையிலான குழு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

சூப்பர்மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி வண்டிகள் தொற்றுநோய் பகுதிகளாக மாறியுள்ளதால், அவற்றைமே 15 வரை மூட அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை வழங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டால் அரசின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளன. 

Advertisement