This Article is From Jul 21, 2020

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதன் உச்சத்தை அடைந்தது: எய்ம்ஸ் இயக்குநர்

டெல்லியில் திங்களன்று 954 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதன் உச்சத்தை அடைந்தது: எய்ம்ஸ் இயக்குநர்

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதன் உச்சத்தை அடைந்தது: எய்ம்ஸ் இயக்குநர்

New Delhi:

கடந்த ஏழு வாரங்களில் முதன்முறையாக டெல்லியில் திங்களன்று 1,000க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிப்பு பதிவாகியிருந்தது. இது தேசிய தலைநகரில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதாகத் தெரிகிறது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தளர்த்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தோன்றியதால், "கெஜ்ரிவால் மாடலே" வெற்றிக்கு காரணம் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து வருகிறது. எனினும், டெல்லி அரசின் கையில் இருந்து வெளியேறிய பின்னர் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பாஜக கூறி வருகிறது. டெல்லியில் திங்களன்று 954 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறும்போது, டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதாக தெரிவதாக தெரிவித்துள்ளார். ஆனால், எந்தவொரு நடவடிக்கை எடுப்பதிலும் எச்சிரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார். 

டெல்லியின் சில பகுதிகள் தான் உச்சத்தை எட்டியதாக தெரிகிறது. பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் அவ்வாறு தெரிகிறது. எனினும், இன்னும் சில பகுதிகள் உச்சத்தை எட்டவில்லை. சில மாநிலங்களில் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அம்மாநிலங்களும் உச்சத்தை எட்டும் என்று அவர் கூறினார். 

.