தொடர்பு தடங்களை கண்டறிய குறிப்பிட அளவிலான செயலியை மட்டுமே தாங்கள் அனுமதிப்போம் என ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
ஆப்பிள் இன்க் மற்றும் ஆல்பாபெட் இன்க் கூகுள் இணைந்து உருவாக்கும் புதிய தொடர்பு தடமறிதல் செயலியானது கொரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதில் இருப்பிட வசதியை கண்காணிக்கும் முறையை தடை செய்துள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் மற்றும் கூகிளின் இயக்க முறைமைகள்(OS) 99 சதவிகித ஸ்மார்போன்களுக்கு சக்தி அளிக்கின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அருகில் உள்ளார்களா என அறிவிக்கும் வகையில் புதியதாக ஒரு செயலியை உருவாக்க திட்டமிட்டனர். இந்த செயலியை சுகாதாரத் துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொற்று குறித்து தெரிந்துகொள்ள மூன்றாம் நபர்கள் முயலும் பட்சத்தில், தனிமனிதனின் தரவுகள் குறித்த அரசாங்கத்தின் விவரங்களை மூன்றாம் நபர்கள் அறிந்துகொள்வதை தடுக்க இந்த நிறுவனங்கள் புதிய செயலியை உருவாக்குகின்றன. செயலியை உருவாக்க இந்த நிறுவனங்கள் பயனாளர்களின் புளுடூத் தரவுகளை மட்டுமே பயன்படுத்துகின்றன. தவிர ஜி.பி.எஸ் தரவுகளை பயன்படுத்தவோ சேமிக்கவோ இல்லை.
ஆனால், அமெரிக்காவின் பல மாகாணங்களில், கொரோனா தொற்று பரவல் குறித்து செயலியை உருவாக்கும் நபர்கள்/நிறுவனங்கள் ஜி.பி.எஸ் தரவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும். இந்த அனுமதி முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்காவின் உதா மாகாணத்தின் ஹெல்தி டுகெதர் காண்டாக்ட் டிரேசிங் செயலியை புளூடூத் மற்றும் ஜி.பி.எஸ் பயன்பாட்டினைக் கொண்டு உருவாக்கிய ட்வென்டி மென்பொருள் நிறுவனம், ஆப்பிள் மற்றும் கூகுள் இல்லாமல் தற்போதைய செயலி சிறப்பாக இயங்குவதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.
மேலும், “ஆப்பிள் மற்றும் கூகுளின் அணுகுமுறையானது எங்கள் செயலியைவிட சிறந்ததாக இருந்தால், அவற்றின் அம்சங்களை பிற்காலத்தில் நாங்கள் எங்கள் செயலியுடன் இணைத்துக்கொள்வோம்” என குறிப்பிட்டிருந்தது.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் ஏற்கெனவே ஏபி டிரேஸ் டுகெதர் செயலியை (ABTraceTogether app) பயன்படுத்தி வருகிறது. இது ஜி.பி.எஸ் சேவையை பயன்படுத்தவில்லை. எனவே இந்த செயலிக்கு பதிலாக ஆப்பிள் மற்றும் கூகுளின் சேவையை நாங்கள் பயன்படுத்த தயராக இல்லை என அம்மாகாணம் தெரிவித்துள்ளது.
சுகாதார பயன்பாட்டினை பொருத்தமட்டில், ஜி.பி.எஸ் சேவைகளைக் கொண்டு சேகரிக்கப்படும் தனிநபர் தரவுகள் வெளியில் கசியுமாயின் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என தனிமனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
தொடர்பு தடங்களை கண்டறிய குறிப்பிட அளவிலான செயலியை மட்டுமே தாங்கள் அனுமதிப்போம் என ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த வகையான செயலியை அமெரிக்க பயன்படுத்த அனுமதிக்கும் என்றும் கூறியுள்ளன.