டெல்லியில் 2,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
New Delhi: கொரோனா பாதித்தவர்களுக்கு மேற்கொள்ளும் ப்ளாஸ்மா சிகிச்சையின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளதென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் குணம் அடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மா மூலக்கூறுகள் பெறப்பட்டு, அவை அதிகம் கொரோனா அதிகம் பாதித்தோரின் இரத்தத்தில் செலுத்தப்படும். குணம் அடைந்தவர்களின் இரத்தத்தில் தொற்றை எதிர்க்கும் சக்தி இருக்கும்.
இதனால் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா செலுத்தும்போது, அவர்கள் குணம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உலகில் முன்பு பல நோய்கள் தாக்கப்பட்டபோது, இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை கடைபிடிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்புக்கு பல்வேறு மருத்துவர்கள் பிளாஸ்மா முறையை கடைபிடிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் சோதனை முயற்சியாக இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது முழு வெற்றி அடைந்தால்தான், பிளாஸ்மா சிகிச்சையை பரவலாக்க அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கும்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லியில் சோதனை அடிப்படையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'கடந்த சில நாட்களாக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில், பிளாஸ்மா சிகிச்சையை சோதனை அடிப்படையில் மேற்கொண்டோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது.
முதல்கட்டமாக நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முழு குணம் அடைவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், முதல் கட்ட முடிவுகள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
பிளாஸ்மா சிகிச்சை பெற்றுவரும் 4 பேரில் 2 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விடுவார்கள். ஒருவருக்கு மட்டும் வென்ட்டிலேட்டர் வசதி தேவைப்படுகிறது. சோதனை முயற்சி முழு வெற்றி பெறற்று விட்டால் பிளாஸ்மா சிகிச்சையை பரவலாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கேட்போம்' என்றார்.
மூத்த மருத்துவர் எஸ்.கே. சாரின் கூறுகையில், 'பிளாஸ்மா சிகிச்சை நன்றாக வேலை செய்கிறது என்பதைத்தான் முடிவுகள் காட்டுகின்றன. இன்னும் 2 -3 பேருக்கு இதே முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இன்றைக்கு அது தொடங்கி விடும் என நினைக்கிறேன். 10 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம் பெற்றுவிட்டனர் என்றால், அது முக்கிய திருப்பமாக அமையும்.' என்றார்.
டெல்லியில் 2,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் குணம் அடைந்த தகவலை டெல்லி அரசு வெளியிட்டது. 49 வயதான அவர், வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சையை சோதனை அடிப்படையில் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. இவை வெற்றி பெற்றால், மருந்து கட்டுப்பாடு கழகத்தின் அனுமதி தேவை. இந்த அமைப்பு இரத்த தானம் செய்வதற்கான விதிகளை தளர்த்தினால், பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அதிகளவு பெற முடியும்.
World
67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.
India
4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.
State & District Details