ஊரடங்கை தளர்த்துவதா? டெல்லி மக்களிடம் ஆலோசனை கேட்கும் முதல்வர் கெஜ்ரிவால்!
ஹைலைட்ஸ்
- ஊரடங்கை தளர்த்துவதா? டெல்லி மக்களிடம் ஆலோசனை கேட்கும் முதல்வர் கெஜ்ரிவால
- நாளை மாலை 5 மணிக்குள் பரிந்துரைகளை இலவச எண்ணாண 1031க்கு அனுப்பலாம்
- வாட்ஸ் ஆப் 8800007722 எண்ணுக்கும் அனுப்பி வைக்கலாம்
New Delhi: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஏழாவது வாரத்தில் உள்ள நிலையில், அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து டெல்லி மக்கள் பதிலளிக்குமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் பிரதமர் நரேந்தி மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், ஊரடங்கு தொடர்பான தங்களது முடிவினை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கெஜ்ரிவால் டெல்லி மக்களிடம் ஆலோசனை கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ஆன்லைன் மூலம் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால் கூறும்போது, மே.17ம் தேதிக்கு பிறகு அரசு என்ன செய்யலாம்? என்பது தொடர்பான பரிந்துரைகளை மக்கள் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
நாளை மாலை 5 மணிக்குள் பரிந்துரைகளை இலவச எண்ணாண 1031, என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம், வாட்ஸ் ஆப் 8800007722 எண்ணுக்கும் அனுப்பி வைக்கலாம். அல்லது delhicm.suggestions@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு இ-மெயிலும் அனுப்பலாம் என்று கூறியுள்ளார்.
சிறந்த பரிந்துரைகள் தொடர்பாக மருத்துவர்களுடனும், வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், "ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு நுணுக்கங்களை" எவ்வாறு கையாள்வார்கள் என்பது குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
டெல்லி அரசுக்கு வருவாய் வேண்டும், மக்களுக்கும் தங்களது கடைகள் மற்றும் தொழில்கள் பழைய படி இயங்க வேண்டும் என்பதில் கெஜ்ரிவால் தெளிவாக உள்ளார்.
ஊரடங்கை தளர்த்துவதற்கு டெல்லி தயாராக உள்ளதாக கடந்த வாரம் கெஜ்ரிவால் கூறியிருந்தார். மத்திய அரசின் நெறிமுறைகள் படி, கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாட்டு தளர்வுகளையும் கெஜ்ரிவால் அமல்படுத்தியுள்ளார்.
நேற்று பிரதமருடனான சந்திப்பில், அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர தேசிய தலைநகரில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.