Read in English
This Article is From Jun 26, 2020

குவஹாத்தியில் மேலும் இரண்டு வாரங்களுக்கு லாக்டவுன்: அசாம் சுகாதாரத்துறை அமைச்சர்!

அடுத்த இரண்டு வாரங்களுக்கு அசாம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூன் 15 முதல் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பே இந்த முடிவினை எடுக்க தூண்டியதாக சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

தற்போது அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,000ஐ கடந்துள்ளது.

Guwahati/ New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 5 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கையில், நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,321 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அசாம் மாநிலம் குவஹாத்தியில் லாக்டவுனை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அடுத்த அடுத்த ஏழு நாட்களுக்கு மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்படும் என்று அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தற்போது தெரிவித்துள்ளார். இக்காலக்கட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்றும், “ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கடைகள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.