This Article is From Mar 31, 2020

கொரோனாவுக்கு மலேரியா மருந்தை எடுத்துக் கொண்ட டாக்டருக்கு நெஞ்சுவலி!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா சிகிச்சைக்காக ஒரு சில மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்திருந்தது. அதில் மலேரியா தடுப்பு மருந்தும் ஒன்று.

கொரோனாவுக்கு மலேரியா மருந்தை எடுத்துக் கொண்ட டாக்டருக்கு நெஞ்சுவலி!!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • அசாமில் இதுவரைக்கும் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை
  • முன்னெச்சரிக்கையாக மருத்துவர் ஒருவர் மலேரியா மருந்தை எடுத்துக்கொண்டார்
  • நெஞ்சுவலி ஏற்பட்டு 44 வயது மருத்துவர் உயிரிழந்தார்.
Guwahati:

அசாமில் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட மருத்துவர் ஒருவர் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு மாநிலமான அசாமில் கொரோனாவால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், அங்கு உத்பல்ஜித் பர்மான் என்ற 44 வயது மருத்துவருக்கு கொரோனா குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மயக்கவியல் வல்லுநரான அவர், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையில் இறங்கினார்.

இதன்படி, மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அவர் எடுத்துக் கொண்டார். இதன்பின்னர் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக தகவல்களை தெரிவித்திருக்கிறார். 

ஒருகட்டத்தில் நெஞ்சு வலி அதிகமாகி அவரது உயிர் பிரிந்துள்ளது. இந்தியாவின் உயர்மட்ட மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா வந்தால் சில மருந்துகளை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது. அவற்றில் ஒன்றுதான் இந்த மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோராகுயின்.

அதே நேரத்தில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்திருந்தது. 

நாடு முழுவதும் கொரோனாவால் 1200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அசாம் மாநிலத்தை கொரோனா பாதிக்கவில்லை. அங்கு 21 நாட்கள் ஊரடங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. 

இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை செயலர் சமிர் சின்ஹா, NDTVக்கு அளித்துள்ள பேட்டியில், 'ஊரடங்கு உத்தரவை கடுமையாக நிறைவேற்றப்படுகிறது. அசாமில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை நடத்தி வருகிறோம். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளோரோகுயின் பாஸ்பேட் மற்றும் ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 


 

.