Read in English
This Article is From Apr 30, 2020

'ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் ஏ.டி.எம்-கள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்' - சென்னை மாநகராட்சி

விதிகளை மீறும் அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது

Advertisement
இந்தியா Posted by

அணைத்து ஏ.டி.எம் இயந்திரங்களும், ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கு பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்

Highlights

  • உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ள கொரோனா நோய் தொற்று காரணமாக
  • பூட்டுதலின் போது அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ், திறக்க அனுமதிக்கப்பட்
  • ஊரடங்கிற்கு பிறகு சென்னை முழுவதும் சுமார் 16,000 ஊழியர்கள் வீடு வீடாக சென
Chennai:

உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ள கொரோனா நோய் தொற்று காரணமாக நகரத்தில் உள்ள அணைத்து ஏ.டி.எம் இயந்திரங்களும், ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கு பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. மேலும் புதிதாக விதிக்கப்பட்டுள்ள விதிகளை மீறும் அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

பூட்டுதலின் போது அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ், திறக்க அனுமதிக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கட்டாய சமூக விலகல் மற்றும் அடிக்கடி கை கழுவுவதை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. 

ஊரடங்கிற்கு பிறகு சென்னை முழுவதும் சுமார் 16,000 ஊழியர்கள் வீடு வீடாக சென்று நோய் தொற்று குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், சென்னையில் தற்போது கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. நகரத்தில் நேற்று மட்டும் 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை சென்னையில் சுமார் 768 பேர் கொரோனாவால் பகுதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களை சோதிக்கும் அளவை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது. 

Advertisement

இந்நிலையில், சோதனை அளவில் சென்னை ஒரு மில்லியனுக்கு 3,385 பேரை சோதித்துவருகின்றது. அதே சமயம் இந்தியாவில் சராசரியாக ஒரு மில்லியனுக்கு 508 சோதனைகள் நடைபெறுகின்றன தற்போது இந்திய அளவில் சென்னையில் தான் அதிக அளவு சோதனை செய்யப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் திரு. பிரகாஷ் நேற்று தெரிவித்தார். மேலும் இந்த சோதிக்கும் அளவு இன்னும் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

"சென்னையில் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ளது, அதனால் தான் பாதிப்பும் அதிகம் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் சென்னையில் தான் அதிக அளவில் சோதனைகள் நடைபெறுகின்றது என்றும், அதை மேலும் அதிகரிக்க உள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை பரவல் உள்ள அனைத்து இடங்களையும் உள்ளாட்சி அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

Advertisement
Advertisement