This Article is From Mar 10, 2020

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு: ராமதாஸ் சொன்ன முக்கிய யோசனை!

Coronavirus Awareness: “கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த  செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது"

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு: ராமதாஸ் சொன்ன முக்கிய யோசனை!

Coronavirus Awareness: "ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில்,  ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது"

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது
  • இந்திய அளவில் கொரோ வைரஸ் பாதிப்பு வேகமாக கூடி வருகிறது
  • இதுவரை 42 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Coronavirus Awareness: உலகம் முழுவதும் 100 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி உயிரிழப்பு 3,800-ஐத் தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாலத்தீவுகள், பல்கேரியா, கோஸ்டாரிக்கா, பரோ தீவுகள், பிரெஞ்சு கயானா, மால்டா, மார்ட்டினிக் மற்றும் மேல்டோவா குடியரசு ஆகிய 8 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியத் துறைமுகங்களில் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் நிறுத்தி வைக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்குச் செல்ல விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இப்படி உலக அளவிலும் இந்திய அளவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் இயங்கும் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களால் முயன்ற வரை கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு கொடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள், செல்போனிலிருந்து இன்னொருவருக்கு அழைக்கும்போது, கொரோனா குறித்த விழிப்புணர்வும், அதைத் தடுப்பிற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கும் வகையில் காலர் டியூன் செட் செய்துள்ளனர். இது வெறுமனே ஆங்கிலத்தில் மட்டுமே வருவதனால் இருக்கும் சிக்கல் குறித்து பாமகவின் நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் விளக்கியுள்ளார். 

ராமதாஸ், “கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த  செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில்,  ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாகப் பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார். 

.