This Article is From Jul 03, 2020

கொரோனா பரவலால் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31-ம்தேதி வரை நீட்டிப்பு!

அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாட, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. 

கொரோனா பரவலால் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31-ம்தேதி வரை நீட்டிப்பு!

நாட்டில் 3,79,892 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். தற்போது 2,27,439 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
  • கொரோனா பரவல் குறையாத நிலையில் மத்திய அரசு நடவடிக்கை
  • சிறப்பு விமானங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது
New Delhi:

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஊரடங்கு தளர்வு 2.0 நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், சர்வதேச விமான சேவைக்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சிறப்பு விமானங்கள், மீட்பு விமானங்களின் சேவை தொடர்ந்து செயல்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்த இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த ஜூன் 26-ம்தேதி சர்வதேச விமான சேவை ஜூலை 15-ம்தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், ஜூலை மாதம் முழுவதும் விமான சேவையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 6-ம்தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா மற்றும் சில தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வருகின்றன.
 
.

இதற்கிடையே நாட்டில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருப்பதால் சர்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் உள்நாட்டில் விமான சேவை நடத்தப்படுகிறது. இதில் மிகக்குறைந்த அளவு விமானங்களே இயக்கப்படுகின்றன.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு மட்டும் 20,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 18,213 பேர் மொத்தம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 