Read in English
This Article is From Apr 30, 2020

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல அனுமதித்தது ஏன்? பாஜக தலைவருக்கு வந்த எச்சரிக்கை!

பல்வேறு மாநிலங்களிலும் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல மத்திய அரசு நேற்றை தினம் அனுமதி அளித்தது.

Advertisement
இந்தியா Edited by

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், நாடு முழுவதும் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் உணவில்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல தொடங்கினர்.

Highlights

  • Centre issued guidelines for movement of stranded people
  • Thousands of migrant labourers stranded amid lockdown
  • UP transferred over 12,000 migrant labourers from Haryana
New Delhi:

பாஜகவுக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டதாக எழுந்த கவலைகள் காரணமாகவே வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல அனுமதியளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக என்டிடிவிக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதிக்காமல் இருந்த மத்திய அரசு அதன் முடிவை தளர்த்தியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல்வேறு மாநிலங்களிலும் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல மத்திய அரசு நேற்றை தினம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, மாநிலங்கள் அதற்காக விதிமுறைகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தியது. 

பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்து, 5 வாரங்கள் கடந்த நிலையில், ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர். வேலையில்லை, பணமில்லை, போதிய உணவில்லை போன்ற காரணங்களால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், நாடு முழுவதும் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் உணவு கூட இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல தொடங்கினர். 

Advertisement

இத்தனை வாரங்களாக அனைத்து உள்மாநில செயல்பாடுகளும் முடங்கியது. இதனால், பலர் பட்டினியில் வாடியதை தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசிதிகளை செய்து கொடுப்பதாக அரசு உறுதியளித்தது. 

இந்நிலையல், அண்மையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய தலைமைக்கு பாஜக தலைவர்கள் ஒரு விரிவான பின்னுட்டத்தை வழங்கினர். அதில், கூலித் தொழிலாளர்களுக்கான நெருக்கடி என்பது அரசியல் ரீதியாக நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்ததாக என்டிடிவிக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கவனத்தில் எடுத்துக்கொண்டனர். முதலில் இந்த விவகாரத்தில் இருந்து வெளியேறிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். 

கடந்த வார இறுதியில் ஹரியானாவில் சிக்கித் தவித்த 12,000 கூலித் தொழிலாளர்கள் உத்தர பிரதேசம் மீட்டு அழைத்து வரப்பட்டனர். மத்திய அரசே இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது. 

Advertisement