This Article is From Apr 10, 2020

கொரோனவிலிருந்து மீண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் தற்போது சாதாரண வார்டில் மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனவிலிருந்து மீண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் ஒரு மருத்துவமனை வார்டில் குணமடைந்து வருகிறார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. (கோப்பு)

London:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கிட்டதட்ட அனைத்து நாடுகளும் இந்த தொற்றால் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் பிரிட்டன் பெரும் இழப்பினை சந்தித்து வருகின்றது. 65,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த நாட்டில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிட்டதட்ட 8,000 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் தற்போது சாதாரண வார்டில் மாற்றப்பட்டுள்ளார். தற்போது சிறிது துரம் நடைப்பயிற்சி தொடங்கியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. தன்னுடைய முன்னேற்றத்திற்கு அவரது மருத்துவக் குழுவிற்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.