हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 11, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்; தாராவியை எடுத்துகாட்டாக கூறிய உலக சுகாதார மையம்!!

ஜெனிவாவில் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கடந்த ஆறு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
உலகம்

ஜெனிவாவில் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கடந்த ஆறு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். (File)

Geneva:

கடந்த ஆறு வாரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சேரிப்பகுதியான தாராவி உள்ளிட்ட பகுதிகளை எடுத்துகாட்டாக கூறிய அவர், அங்கெல்லாம் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், தீவிர நடவடிக்கை மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதைக் காட்டியுள்ளது. 

ஜெனிவாவில் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கடந்த ஆறு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், பாதிப்பு மிக தீவிரமாக இருந்தாலும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை உலகெங்கிலும் இருந்து பல எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன. 

இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா, மும்பையின் தாராவி உள்ளிட்ட பகுதிகளை அந்த எடுத்துகாட்டுகளாக கூறலாம். நோய்வாய்ப்பட்ட அனைவரையும் பரிசேதிப்பது, தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், தொற்று பரவும் சங்கிலி உடைந்து வைரஸ் அடங்க முக்கிய வழிவகுக்கும். 

கொரோனா வைரஸ் தொற்று கடந்த டிசம்பரில் சீனாவில் உருவானதில் இருந்து, உலகளவில் குறைந்தது, 555,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

மொத்தமுள்ள 196 நாடுகளில் 12.3 மில்லியன் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

"தேசிய ஒற்றுமை மற்றும் உலகளாவிய ஒற்றுமையுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கை மட்டுமே இந்த தொற்றுநோய் பாதிப்பை குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்."
 

Advertisement
Advertisement