குடியரசுத் தலைவர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!
ஹைலைட்ஸ்
- குடியரசுத் தலைவர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா
- அங்குள்ள 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18,000ஐ தாண்டியது
New Delhi: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் உள்ள100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த நபருக்கு நான்கு நாட்கள் முன்னதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றவர்களை சோதித்த போது அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, செயலாளர் மட்ட அளவில் உள்ள அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000ஐ தாண்டியது. இன்று காலை நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,601ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கையானது 590ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிராவை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் இருந்த டெல்லியிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது.