Read in English
This Article is From May 21, 2020

சர்வதேச அளவில் 50 லட்சத்தினை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

இதுவரை 3,26,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும்போது உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. தற்போது மொத்த இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன.

Advertisement
உலகம்

ஐரோப்பா மொத்த பாதிப்புகளில் 20 சதவிகிகதத்தினை கொண்டுள்ளது

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 லட்சத்தினை கடந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய இந்த தொற்றானது தற்போது ஏறத்தாழ அனைத்து உலக நாடுகளையும் புரட்டி போட்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிக தாக்கத்தினை ஏறப்படுத்தியுள்ளது. இந்நிலையில், லத்தின் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் 91 லட்சமாக உலகம் முழுக்க தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த போது, அதில் மூன்றில் ஒரு பங்கினை லத்தின் அமெரிக்க நாடுகள் கொண்டிருந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இதில் 20 சதவிகித எண்ணிக்கையை கொண்டிருந்தன.

தற்போது பிரேசிலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Advertisement

ஜனவரியில் சீனாவில், 41 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர். பின்னர் ஏப்ரலில் சர்வதேச அளவில் ஒரு மில்லியன் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் ஒரு  மில்லியன் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

காய்ச்சல் நோயாளிகளைக்காட்டிலும் இந்த தொற்றானது அதிக எண்ணிக்கையில் மக்களை பாதித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என கணித்திருந்தது. ஆனால், தற்போதைய எண்ணிக்கையானது 5 மில்லியனை கடந்துள்ளது.

Advertisement

அதே போல சர்வதேச அளவில் இதுவரை 3,26,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும்போது உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. தற்போது மொத்த இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்து வரக்கூடிய நிலையிலும், பல நாடுகள் பள்ளி மற்றும் பணியிடங்களைத் திறக்க தொடங்கியுள்ளன.

Advertisement

தடுப்பூசியை பொறுத்த அளவில் அமெரிக்கா தற்போது சில சாதகமான முடிவுகளை கொடுக்கும் தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement