This Article is From Apr 21, 2020

'இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது' - சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் 59 மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. யூனியன் பிரதேசமான கோவாவில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது அனைவரும் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். 

கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பதற்கு ஒரு மாதம் தேவைப்பட்டிருக்கிறது.

New Delhi:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் 3.4-லிருந்து, 7.5 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அறிந்து கொள்ள முடியும். கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலம்தான், அதன் பரவலை அளக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இருமடங்காக குறைந்த நேரத்தில் அதிகரித்தால் வைரஸ் தீவிரமாக பரவுகிறது என்றும், அதிக காலம் எடுத்துக்கொண்டால் பாதிப்பு குறைவாக உள்ளது என்றும் கருதலாம்.

அந்த வகையில் கடந்த 7 நாட்கள் ஆய்வின் முடிவில், கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பதற்கு 7.5 நாட்கள் ஆகின்றன. இதன் மூலம் ஊரடங்கு உத்தரவுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்றளவில் நாட்டில் 17,656 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 543 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் பலியாகியுள்ளனர். 

கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பதற்கு ஒரு மாதம் தேவைப்பட்டிருக்கிறது. 

தேசிய அளவில் அதிகரிக்கும் பாதிப்பின் சராசரியை விட, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட 18 மாநிலங்களின் பாதிப்பு சராசரி குறைவாகவே உள்ளது. 

நாட்டில் 59 மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. யூனியன் பிரதேசமான கோவாவில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது அனைவரும் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.