This Article is From May 25, 2020

“குஜராத்தின் சிவில் மருத்துவமனை ஒரு இருட்டு சிறையை போல உள்ளது“: நீதிமன்றம் கடும் தாக்கு!

பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான மாநில அரசிடம் அறிக்கை தயார் செய்து தரக்கோரி மாநில சுகாதார அமைச்சர் நிதின்பாய் ரத்திலால் படேலை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

“குஜராத்தின் சிவில் மருத்துவமனை ஒரு இருட்டு சிறையை போல உள்ளது“: நீதிமன்றம் கடும் தாக்கு!

அகமதாபாத்தின் சிவில் மருத்துவமனையில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Ahmedabad/ New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தினையடுத்து குஜராத் உள்ளது. இம்மாநிலத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், “மனித வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது,  போன்ற ஒரு இடத்தில் அதை இழக்க அனுமதிக்கக் கூடாது“ என்று குஜராத் உயர்நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.

இம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களில் 45 சதவிகிதத்தினர் அதாவது 350 பேர் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையை இருட்டு சிறையுடன் ஒப்பிட்டுள்ளது நீதிமன்றம்.

அகமதாபாத் நகரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 277 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். இந்நிலையில் இதுவரை இந்நகரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 669 பேர் இந்நகரத்தில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான மாநில அரசிடம் அறிக்கை தயார் செய்து தரக்கோரி மாநில சுகாதார அமைச்சர் நிதின்பாய் ரத்திலால் படேலை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

“அகமதாபாத் சிவில் மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஏழைகள் மட்டுமே இம்மாதிரியான பொது மருத்துவமனைக்கு வருவார்கள். இந்நிலையில் மனித வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது,  போன்ற ஒரு இடத்தில் அதை இழக்க அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், கடந்த வாரங்களில் இம்மருத்துவமனைகளில் இறப்புகள் அதிகரித்து வருகின்றது. இனி வரக்கூடிய காலக்கட்டங்களிலும் இது அதிகரிக்கக்கூடும். இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மூன்று அல்லது நான்கு நாட்களில் உயிரிழந்துவிடுகிறார்கள் என்பது வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது.“ என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், மாநில சுகாதார அமைச்சர் எத்தனை முறை அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்? அங்கு நிலவக்கூடிய சிக்கல்கள் குறித்தும், அங்கு பணிபுரியக்கூடிய மருத்துவ ஊழியர்களிடம் எத்தனை முறை கலந்தாலோசனையை மேற்கொண்டுள்ளார்? என நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளது.

அசர்வா பகுதியில் அமைந்துள்ள பிரதான சிவில் மருத்துவமனை, ஆசியாவில் குடிமக்கள் நடத்தும் மிகப்பெரிய மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 1,200 படுக்கையறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இருப்பினும், பெரும்பாலான நோயாளிகளுக்கு பொது வார்டுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட அறைகள் பயன்படுத்தப்படாமல் செயற்கையான தட்டுப்பாடுகள் உருவாக்கப்படுவதாகவும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

இவ்வாறான அரசு மருத்துவமனைகளில்தான் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது, தனியார் மருத்துவமனைகளில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ள 4,500 ரூபாய் வரை செலவாகும்.

சமீபத்தில், அகமதாபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கயாசுதீன் ஷேக், சிவில் மருத்துவமனையில் ஏற்படும் அதிக இறப்பு மற்றும் குறைந்த அளவிலான குணமடைவோர் விகிதம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலையீட்டைக் கோரி கடிதம் எழுதியிருந்தார். இம்மருத்துவமனையில்  கோரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் அலட்சியம் மற்றும் முறையற்ற சிகிச்சை அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று NHRC க்கு எழுதிய கடிதத்தில் திரு ஷேக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.