This Article is From May 25, 2020

அசாமில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 400ஐ கடந்தது!

இதில், கோலாகாத் மாவட்டத்தில் இருந்து 53 பேரும், கோக்ராஜாரில் 6 பேரும், கரீம்கான்ஜில் 5 பேரும், தேமாஜியில் 4 பேரும், தின்சுகியா மற்றும் சிவசாகரில் தலா ஒருவர் என பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 400ஐ கடந்தது!

அசாமில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 400ஐ கடந்தது!. (Representational)

Guwahati:

அசாம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 466ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாராத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார். 

இதில், கோலாகாத் மாவட்டத்தில் இருந்து 53 பேரும், கோக்ராஜாரில் 6 பேரும், கரீம்கான்ஜில் 5 பேரும், தேமாஜியில் 4 பேரும், தின்சுகியா மற்றும் சிவசாகரில் தலா ஒருவர் என பாதிக்கப்பட்டுள்ளனர். 

மொத்தம் பாதிக்கப்பட்ட 466ல் 57பேர் குணமடைந்துள்ளனர். அதில், 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இதில் பெரும்பாலானவர்கள் அசாமிற்கு வெளியே இருந்து வந்தவர்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, வெளிமாநிலங்களில் இருந்து அசாமிற்குள் வருபவர்களுக்கு விரைந்து சோதனை மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். அதனால், இங்கிருப்பவர்களிடம் இருந்து கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. வெளியில் இருந்து வந்தவர்களாலே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட பின்னரே அசாமில் கொரோனா பாதிப்பு எண்ணிகை அதிகரிக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து, வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுவரை மாநிலத்தில் உள்ள 7 சோதனை மையங்களில் 66,444 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.