இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது!
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது!
- உயிரிழப்பு எண்ணிக்கையானது 25,602 ஆக உயர்வு
- நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு 34,956 பேர் பாதிப்பு
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 10 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு 34,956 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 687 பேர் வரை உயரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 1,003,832 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது 25,602 ஆக உயர்ந்துள்ளது. 6.35 லட்சத்திற்கும் அதிகமானோர் அல்லது 63.34 சதவீதம் பேர் வரை குணமடைந்துள்ளனர்.
அண்மையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி, கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், மகாராஷ்டிராவில் 8,641 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில், மும்பையில் மட்டும் 1,476 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், அங்கு ஒரே நாளில் 266 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் இறப்பு விகிதமானது 3.94 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கையானது 1,100க்குள் இருந்து வருகிறது. எனினும், தென்தமிழகமான மதுரையிலும், சென்னையை ஒட்டியுள்ள மூன்ற மாவட்டங்களில் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 வாரத்தில் மட்டும் மதுரையில் 7 மடங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,169 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அதிகளவில் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. பெங்களூரில் மட்டும் 25,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 51,422 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் இதுவரை 19,754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 48 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அங்கு 3 வாரங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது.
21,764 பேர் வரை பீகாரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 16 நாள் ஊரடங்காக வரும் ஜூலை 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, ஜூன் மாத மத்திதயில் குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 52 சதவீதமாக இருந்தது, தற்போது ஜூலை மாத மத்தியில் 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையானது குறைந்து வருகிறது.
கடந்த மார்ச் 23ம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2 மாதத்திறகுப் பின்னர் மே.25ம் தேதியன்று உள்நாட்டு பயணிகள் விமானத்திற்கு மட்டும் அனுமதி வழங்கினர். இதனிடையே, விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, இன்று முதல் இருநாட்டு சர்வதேச விமான போக்குவரத்தும் இன்று முதல் தொடங்குகிறது. இதேபோல், ஜெர்மன் மற்றும் இங்கிலாந்துடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிதுள்ளது. அதேபோல், உலகளவில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 138,201 ஆக அமெரிக்காவில் அதிகம் உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 5.89 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1.38 கோடி பேர் வரை கொரோ வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.