বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 24, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,000ஐ தாண்டியது; 718 பேர் உயிரிழப்பு!

Coronavirus Cases, India: நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேலானது மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவை ஆகும். அந்த மாநிலங்களில் மட்டும், தலா 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

Coronavirus cases, India: கொரோனா பாதிப்புக்கு 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Highlights

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 23,077 ஆக உயர்வு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,684 பேர் கொரோனாவால் பாதிப்பு
  • மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கையும் 718ஆக அதிகரிப்பு
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 23,077 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கையும் 718ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 37 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லை, அதிவேகமாகவும் உயரவில்லை, சமமாக செல்கிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேலானது மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவை ஆகும். அந்த மாநிலங்களில் மட்டும், தலா 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

இதுதொடர்பாக சுகாதார நெருக்கடியைச் சமாளிக்கப் பிரதமர் நரேந்திர மோடி அமைத்த 11 அதிகாரம் பெற்ற குழுக்களில் ஒன்றின் தலைவரான சி.கே.மிஸ்ரா கூறும்போது, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுதலாவதற்கு முன்பு இருந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 16 மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல், 24 மடங்கு சோதனை அளவும் உயர்த்தப்பட்டுள்ளது என கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் நகரில் உருவெடுத்த இந்த வைரஸால், உலகளவில் தற்போது 27 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகள் லாக்டவுனில் உள்ள நிலையில், இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான ரமலான் இன்று முதல் தொடங்குகிறது. 

Advertisement

இதுதொடர்பாக சுகாதார நெருக்கடியைச் சமாளிக்கப் பிரதமர் நரேந்திர மோடி அமைத்த 11 அதிகாரம் பெற்ற குழுக்களில் ஒன்றின் தலைவரான சி.கே.மிஸ்ரா செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா பரவலைக் குறைக்கவும், பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்களையும் அதிகரிக்க முடிந்தது என தெரிவித்தார். 

நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்படைந்தவர்களில் 4,749 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மீட்பு விகிதம் இன்று காலை 20.57 சதவீதமாக அதிகரித்துள்ளது என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மும்பையில் 4,025 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,427 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று மட்டும் புதிதாக 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 522 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

Advertisement